திருப்பரங்குன்றம் மலை மீது ஏழு பேர் கொண்ட தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே திருப்பரங்குன்றம் மலை மீது உள்ளது தீபத்தூண் அல்ல நில அளவை கல் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, சென்னையில் இருந்து ஐந்து தொல்லியல் துறை அதிகாரிகளும், மதுரையில் இருந்து இரண்டு அதிகாரிகளும் காவல் ஆய்வாளர் பாதுகாப்புடன் மலை மீது ஆய்வு மேற்கொண்டனர்.
















