திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாருதி சிமெண்ட் ஆலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.
கரியமாணிக்கம் பகுதியில் உள்ள மாருதி சிமெண்ட் தொழிற்சாலை கடந்த 15 வருடத்திற்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வரிஏய்ப்பு நடைபெறுவதாக வருமானவரி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆலையில் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருச்சியில் உள்ள ஆலை உரிமையாளர் சுப்பிரமணி வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
















