கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுண்ணாலம்பட்டி தரப்பு கலைஞர் நகரில் ஏழை, எளிய மக்களுக்குச் சுமார் 150 இலவச வீட்டு மனை பட்டா வழங்க உத்தேசிக்கப்பட்டு பயனாளிகள் தேர்வு நடைபெற்றது.
இதில் வெளியூர் நபர்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளதை அறிந்த ஊத்தங்கரை பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.
















