மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிக்கச் சென்று கொண்டிருந்த நபரின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கத்தில் சந்தேஷ்காலி தாக்குதல் வழக்கில் முக்கிய சாட்சியான போல்நாத் ஜோஷ், சாட்சியம் அளிப்பதற்காக நீதிமன்றத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிர்திசையில் வந்த லாரி, ஜோஷின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜோஷின் மகனும், கார் ஓட்டுநரும் உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் ஜோஷ் உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையில், இந்தச் சதிக்கு பின்னால் சந்தேஷ்காலி தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷாஜகான் ஷேக் உள்ளதாகப் போல்நாத் ஜோஷின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், சாலையின் எதிர் திசையில் அசுரவேகத்தில் வந்த லாரி, கார் மீது மோதி நீர்நிலை வரை இழுத்துச் சென்றதாக நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இது, இந்த விபத்தின் பின்னணியில் சதி உள்ளதா? எனும் சந்தேகத்தை மேலும் ஆழப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
















