திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் உள்ள மாருதி சிமெண்ட் ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரியமாணிக்கம் சாலையில் உள்ள மாருதி சிமெண்ட் தொழிற்சாலைக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில், சமயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மாருதி சிமெண்ட் ஆலை மற்றும் மாம்பழச்சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள் வீடுகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டர்.
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாகவும், போலி பில்கள் கொண்டு சிமெண்ட்க்கு தேவையான மூலப்பொருட்கள் வாங்கியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் 6 மணி நேரமாக மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
















