திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ள பர்வத மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பச்சையம்மன் கோயிலில் இரு தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கிய நிலையில், யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.
இதனை தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்கக் கலசங்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலாக எடுத்துவரபட்டு கோயில் கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராமஜெயம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















