சட்டப்பேரவை தேர்தலை ஒட்டிச் சென்னையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகத் தலைமை குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் விஜயின் அடுத்தக்கட்ட தேர்தல் பிரசாரம், பூத் கமிட்டி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
















