திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்காக இண்டி கூட்டணி அளித்த மனுவில், புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம் முதல் கையெழுத்திட்டதை கண்டித்து, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, வைத்திலிங்கத்தின் உருவ பொம்மையை பாடையில் எடுத்து வந்து தீயிட்டு எரித்தனர்.
அப்போது, போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேரணியாக சென்று காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்து சென்றனர்,
















