ஹிந்து மத சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தமிழக அரசு பாகுபாடு காட்டுவதாக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு மோசமான நடவடிக்கையை கையாண்டு வருவதாக தெரிவித்தார்.
அமைச்சர் கே.என்.நேரு மீதான புகாரில் அதே வேகத்தை காட்டாதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஹிந்து மத சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தமிழக அரசு பாகுபாடு காட்டுகிறது என்றும், கோயில் கும்பாபிஷேகத்திற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வானதி கேட்டுக்கொண்டார்.
















