திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டிணத்தில் உள்ள சிவன் கோயிலில், சுமார் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சிதம்பரேஸ்வரர் சிவன் கோயிலில், சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், கோயிலின் அதிட்டானப் பகுதியில் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அது, 13ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு என கூறப்படுகிறது. இதையடுத்து, கோயிலின் சிறப்புகளை கண்டறிய உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தொல்லியல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















