சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் ஸ்மார்ட் இந்தியியா ஹேக்கத்தான் இறுதிச்சுற்று போட்டிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், மாணவர்களின் புத்தாக்க கண்டு பிடிப்புகளை அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் துணைத் தலைவர் அபய் ஜெர்ரி பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா ஹேக்கத்தான் மூலம் புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் வெற்றி பெற்று வருவதாக கூறினார்.
நாடு முழுவதும் 60 மையங்களில் நடைபெறும் இந்த ஹேக்கத்தானில், 275 முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதாகவும், போட்டிகளின் முடிவில் புதிதாக 100 ஸ்டார்ட் அப் கண்டுபிடிப்புகள் நிச்சயமாக வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சாய்ராம் பொறியியல் கல்லூரி தலைவர் டாக்டர் சாய் பிரகாஷ் லியோ முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.
















