ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவின் பத்ராச்சலத்தை நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தார். மாரடி மல்லி மலைப்பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ந்திர சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது எனவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















