தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பணியில் சேர்ந்த புகாரில் 32 பேராசிரியர்களுக்கு ஆளுநர் மாளிகை நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 2017 – 18ம் ஆண்டில் 40 பேராசிரியர்களை நியமித்ததில், முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து, ஆளுநர் கடந்தாண்டு உத்தரவிட்டார்.
இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க, நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆளுநரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி 32 பேராசிரியர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டுமென அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
















