புதுச்சேரியில் பணத் தகராறில் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் தொகுதிகுட்பட்ட செந்தாமரை நகரைச் சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் குடும்ப பிரச்னை காரணமாகக் கணவரை விவகாரத்து செய்து மகளுடன் வசித்து வந்துள்ளார். விவகாரத்து பராமரிப்பு தொகையை கொண்டு வாழ்ந்து வந்த தமிழ்செல்வி கடந்த 5ஆம் தேதி காணாமல்போய் உள்ளார்.
இது தொடர்பாகச் சந்தேகத்தின் அடிப்படையில் ஐயப்பன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஐயப்பனுடன் தமிழ்செல்விநட்பாகப் பழகி வந்தது தெரியவந்தது.
மேலும், வாங்கிய பணத்தை திருப்பித் தராததால் இருவருக்கு ஏற்பட்ட தகராறில் தமிழ்செல்வியின் கழுத்தைநெரித்துக் கொலை செய்து, உடலை மூட்டைக்கட்டி ஆற்றில் வீசியதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, சாக்கு பை வீசப்பட்ட இடத்திற்கு ஐயப்பனைஅழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு, தமிழ்செல்வியின் உடலை கைப்பற்றினர். அப்போது ஐயப்பனை உறவினர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
















