சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் நடை திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மண்டல கால பூஜைகளுக்காகச் சபரிமலை நடை திறந்து, 25 நாட்களை கடந்துள்ளது. சில சனி, ஞாயிறு கிழமைகளை தவிர்த்து, மற்ற எல்லா நாட்களிலும் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக நடை அடைக்கும் போது பக்தர்கள், 18ம் படி ஏற்றப்பட்டு வடக்கு வாசல் வழியாக வெளியே அனுப்பப்படுகின்றனர்.
இதனால் பக்தர்களுக்காக மதியம் 1 மணிக்கு உச்ச பூஜை முடிந்து அடைக்கப்பட வேண்டிய நடை ஒன்றரை மணி வரையும், இரவில் 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி அடைக்கப்பட வேண்டிய நடை அடைப்பதற்கு பதிலாக, 11 மணி 15 நிமிடங்கள் மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
















