தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் அதிகரிக்கும் கடல் அரிப்பை தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
குலசேகரன்பட்டினம் புறநகர் பகுதியில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பால், சாலை முழுவதுமாக மண் திட்டுக்களால் மூடப்பட்டுள்ளது.
சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இரண்டு அடி உயரத்திற்கு மேல் மண் திட்டங்களால் சூழப்பட்டுள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், சாலையில் மூடியுள்ள மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தி, கடல் அரிப்பினை தடுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
















