நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, ‘படையப்பா’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் – கே.எஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவான படையப்பா திரைப்படம், கடந்த 1999-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாகவும், அவரது பிறந்தநாளையொட்டியும் ‘படையப்பா’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
26 ஆண்டுகளுக்குப் பிறகு, நவீன தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள திரைப்படத்தை ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர்.
















