திருவண்ணாமலை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாகப் போக்குவரத்து சிக்னல் பழுதானதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர்.
நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
















