நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கடைக்குள் புகுந்து இளைஞரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
குமாரபாளையத்தை சேர்ந்த சரவணனும், அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்த்து வருகின்றனர்.
இதற்கிடையே, சரவணனின் மனைவியுடன் பணிபுரியும் கண்ணன் என்ற நபர், கணவன் – மனைவி பிரச்னையில் தலையிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கண்ணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு சரவணன் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், சரவணனின் கடைக்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கினார்.
இதில், காயமடைந்த சரவணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















