நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சம்பா பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் வீசிய டிட்வா புயலால் அவை சேதமடைந்தன.
இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















