விருதுநகரில் நடைபெற்ற பாரதி பறை பண்பாட்டு மைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, பறை இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சாத்தூர் அடுத்த மேட்டமலையில் புதிதாகப் பாரதி பறை பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பறை இசைக் கலைஞரான பத்மஸ்ரீ வேலு ஆசான் தோற்றுவித்த மையத்தை, ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
முன்னதாகத் தொடக்க நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆளுநரை 100க்கும் மேற்பட்ட பறை இசை கலைஞர்கள் இணைந்து சிறப்பாக வரவேற்றனர்.
அப்போது, வேலு ஆசானிடம் இருந்து பறையை பெற்றுக்கொண்ட ஆளுநர், உற்சாகத்துடன் பறை இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
















