திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் விளக்கு ஏற்றி கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அரசு மீறியது. இந்நிலையில் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி திருப்பரங்குன்றம் மற்றும் ஹார்விப்பட்டி பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முன்பு பெண்கள் தீபம் ஏற்றினர்.
தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென அவர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் மக்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட உள்ளனர்.
















