ரஷ்ய அதிபர் புதினுக்காக 40 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், இருநாட்டு தலைவர்களின் சந்திப்பில் அநாகரிகமாக நுழைந்தது உலக நாடுகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
ரஷ்யா உடனான தனது உறவை வலுப்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுடன் வெளிப்படையான ராஜதந்திர உறவைக் கொண்டுள்ளார். அவரது இந்திய வருகையும், பிரதமர் நரேந்திர மோடியுடனான அவரது நெருக்கமான உரையாடல்களும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
இத்தகைய சூழலில் துர்க்மெனிஸ்தானின் நிரந்தர நடுநிலைமையின் 30வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் சர்வதேச மன்றத்தில், புதின் மற்றும் ஷெபாஸ் ஷெரிஃப் இடையேயான சந்திப்புக்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், துருக்கி அதிபர் ரசிப் தையிப் எர்டோகன் உடனான சந்திப்பு நிறைவடைய தாமதமானதால், புதினால் குறித்த நேரத்திற்கு ஷெரிஃபை சந்திக்க முடியவில்லை. இதனால் ஷெபாஸ் ஷெரிஃப் சுமார் 40 நிமிடங்கள் வரை இருக்கையில் காத்திருந்தார்.
















