சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சினிமா பாடல்கள் பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதிகள் சுரேஷ்குமார், எம்.எஸ் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சினிமா பாடல்களை பாடி அசத்தினார். இதனை நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கேட்டு உற்சாகம் அடைந்தனர்.
















