உள்நாட்டு தயாரிப்பான பினாகா ராக்கெட்டின் தாக்குதல் தூரத்தை 120 கிலோ மீட்டராக அதிகரிக்கும், 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை இந்திய ராணுவம் முன்மொழிந்துள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு, நீண்ட தூரம் சென்று இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை வலுப்படுத்தும் முயற்சியில் மத்திய பாதுகாப்புத்துறை ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பினாகா ராக்கெட்டின் தாக்குதல் தூரம் தற்போது 40 கிலோ மீட்டர் மற்றும் 75 கிலோ மீட்டருக்கு மேல் உள்ளது.
இதனை 120 கிலோ மீட்டராக அதிகரிப்பதற்காக, 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைப் பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏடிஎம் வகை1 மற்றும் எம்கே1 ராக்கெட்டுகளை பினாகா பல ஏவுகணை அமைப்புக்காக மொத்தம் 10 ஆயிரத்து 147 கோடி ரூபாய் மதிப்பில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
















