அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால், நவம்பர் மாதத்தில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வரும் அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்குக் கூடுதல் வரிகளை விதித்தது.
மேலும், பல்வேறு நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் நவம்பர் மாதத்தில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் பீப்பாய்கள் குறைந்து 69 லட்சம் பீப்பாய்கள் விற்கப்பட்டு வருகின்றன.
இதனால் ரஷ்யாவின் எண்ணெய் வருவாய் நவம்பர் மாதத்தில் 99 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
















