புதுச்சேரியில் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்குத் தின்பண்டம் வாங்கிக்கொடுத்த போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து காவல்துறையின் கண்காணிப்பாளராக ரச்சணா சிங் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் வழக்கம் போலப் பணியில் இருந்த போது தெருவோரம் வசிக்கும் வட மாநிலத்தை சேர்ந்த குழந்தைகளை பார்த்தார்.
அப்போது அவர்களிடம் உரையாடிய ரச்சணா சிங் குழந்தைகளுக்குப் பொம்மை மற்றும் திண்பண்டங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்தார்.
பின்னர் கல்வியின் அவசியம் குறித்து பெற்றோரிடம் எடுத்துரைத்த அவர் அந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்குமாறு அறிவுறுத்தினார்.
இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவியதோடு பாராட்டுகளை பெற்று வருகிறது.
















