முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உடல்நலக்குறைவு காரணமாக மஹாராஷ்டிராவில் காலமானார்.
மஹாராஷ்டிரா மாநிலம் லாத்தூரை சேர்ந்த சிவராஜ் பாட்டீல், தொடர்ந்து 7 முறை லாத்தூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
சிவராஜ் பாட்டீல் 2004 முதல் 2008 வரை மத்திய உள்துறை அமைச்சராகவும், 1991 முதல் 1996 வரை மக்களவையின் சபாநாயகராகவும் இருந்தார்.
2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து, உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்தார்.
90 வயதான சிவராஜ் பாட்டீல் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
















