“கார்த்திகை கடைஞாயிறு” விழாவை ஒட்டித் தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் திருத்தேரோட்ட விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இராகு பகவானுக்குரிய சிறப்புத் தலமான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில், “கார்த்திகை கடைஞாயிறு” விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான, நாகநாத சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தநிலையில் திருத்தேரோட்ட விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் நாகநாதர் உள்ளிட்ட ஐம்பெரும் கடவுளர் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
















