உதகையில் கடும் உறைப்பனி பொழிவதால் அப்பகுதி வெள்ளைப்போர்வை போர்த்தியது போல் ரம்மியாகக் காட்சி அளிக்கிறது.
நீலகிரி மலைப்பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் உறைப்பனி நிலவுவது வழக்கம். அதன்படி நீலகிரி மலைப்பகுதிகளின் பல்வேறு இடங்களில் காலை உறைப்பனி நிலவியது.
இதனால் அங்குள்ள பூங்காக்கள், புல்வெளி மைதானங்கள், வாகனங்கள் மீது பனி படர்ந்து உள்ளது. இதன்காரணமாக அப்பகுதி வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் ரம்மியமாகக் காட்சி அளிக்கிறது.
வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகரித்து, வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே மலை தோட்ட பயிர்களான கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ் போன்றவற்றில் உறைப்பனி படர்ந்துள்ளதால், பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
















