சபரிமலையில் உள்ள சன்னிதான ஆடிட்டோரியத்தில் அரங்கேற்றப்பட்ட ஐயப்ப மகாத்மம் நிகழ்வை திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
ஐயப்ப சுவாமியின் வரலாற்றைக் கதகளி நடனம் மூலம் அரங்கேற்றிக் காட்டிய இந்த நிகழ்வு காண்போரை மெய்சிலிர்க்கச் செய்தது.
மண்ணூர்காவு கதகளி மையம் சார்பில் நடத்தப்பட்ட இந்த மகாத்மத்தில் 28 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று தங்களது நடனத்திறமையை வெளிபடுத்தினர்.
கதகளி நடனத்தை கண்டு ரசித்த திரளான ஐயப்ப பக்தர்கள் கரகோஷம் எழுப்பி நடனக் குழுவினரை ஆரவாரப்படுத்தினர்.
















