தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை காங்கிரஸ் அரசு மோசடி செய்ய முயற்சிப்பதாகப் புகார்கள் எழுந்தன.
தெலங்கானாவில் ஹைதராபாத் தொழில் நிலங்கள் மாற்றும் கொள்கை என்ற திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியது.
இதற்குத் தொடக்கம் முதலே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் திட்டம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனப் பாஜக, சிபிஐ-யிடம் கோரிக்கை வைத்தது.
இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ் முக்கிய பகுதிகளில் உள்ள இந்த நிலங்களை குறிப்பிட்ட சிலருக்கு குறைந்த கட்டணத்தில் வழங்குவதே அரசின் நோக்கம் எனக் குற்றம்சாட்டினார். இது 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான மோசடி எனவும் அவர் தெரிவித்தார்.
















