சபரிமலையில் கடந்த 25 நாட்களில் மாரடைப்பு உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைப்பட்ட 150 ஐயப்ப பக்தர்களின் உயிரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் காப்பாற்றி உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்குப் பூஜை நடைபெற்று வருவதால் நாள் ஒன்றுக்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இவர்களின் அவசர கால உதவிக்காகத் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பணியில் இருந்து வருகின்றனர்.
அதன் படி மாரடைப்பு உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைப்படும் பக்தர்களை உடனடியாக மீட்டத் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் கடந்த 25 நாட்களில் மட்டும் 150 ஐயப்ப பக்தர்களின் உயிர்களை தேசிய மீட்பு படையினர் காப்பாற்றியுள்ளதால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
















