அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மனித உரிமை போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
ஈரானை சேர்ந்த நர்கெஸ் முகமதி, அந்நாட்டில் பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர்.
இதன்காரணமாக அவருக்கு 2023ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் அண்மையில் காலமான ஒரு வழக்கறிஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தலைநகர் டெஹ்ரானுக்கு நர்கெஸ் முகமதிசென்றபோது, சட்டம் – ஒழுங்குப் பிரச்னையை காரணம் காட்டி அவரை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
















