மெஸ்ஸியை பார்க்க முடியாத கோபத்தில் மைதானத்தை ரசிகர்கள் சூறையாடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கொல்கத்தாவில் அமைக்கப்பட்ட 70 அடி உயர சிலையைக் காணொளி மூலமாக திறந்து வைத்தார்.
இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் மெஸ்ஸி தோன்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் சிலையை திறந்து வைத்த மெஸ்ஸி, நேராக மைதானத்திற்கு வந்தார். ஆனால் 30 நிமிடங்கள் மட்டுமே மைதானத்தில் இருந்தார்.
அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மெஸ்ஸியை சுற்றி இருந்தனர்.
மைதானத்தில் இருந்தும் ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை. இதனால் கைகளில் இருந்த தண்ணீர் பாட்டிலை வீசி எறிய தொடங்கினர்.
அதேபோல் மைதானத்தில் இருந்த நாற்காலிகளையும் உடைக்க தொடங்கினர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.
மெஸ்ஸியை பார்க்க சென்ற ரசிகர்கள் கலவரத்தை பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















