அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு மாணவர்கள் பரிதாபமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள தனியார் ஐவி லீக் ஆராய்ச்சி பல்கலைக்கழகமான பிரவுன் பல்கலைக்கழகத்தில் கருப்பு நிற உடையணிந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
மாணவர்கள் இறுதித் தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்த பொறியியல் மற்றும் இயற்பியல் கட்டடத்தில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் இரண்டு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பியோடிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
மேலும், FBI, ATI போன்ற மத்திய, மாநில நிறுவனங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இத்தகைய சூழலில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான தகவல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார்.
















