ஏற்காட்டில் நிலவும் இதமான காலநிலை காரணமாகச் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் பருவநிலை மாற்றங்கள், சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதுமையான அனுபவத்தைக் கொடுத்து வருகின்றன.
பகல் நேரத்தில் மிதமான வெப்பம், இரவு நேரத்தில் உடலை ஊடுருவும் கடும் குளிர், அவ்வப்போது பெய்யும் சாரல் மழையை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.
அதிகாலையில் நட்சத்திர ஏரியில் காணப்படும் உறைபனி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
சூரியனின் முதல் கதிர்கள் ஏரி நீரில் படும்போது, வெண்பனி மெல்ல ஆவியாகி மேலெழும்பும் காட்சிகளை கண்டு சுற்றுலாப் பயணிகள் வியந்தனர்.
மேலும், மரங்களின் இலைகளிலும், புல்வெளிகளிலும் முத்துக்கள் போன்ற பனித்துளிகள் ரம்மியமாகக் காட்சியளிக்கின்றன.
















