பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய்குறித்த விழிப்புணர்வு வீடியோவொன்றை வெளியிட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
இவருக்குக் கடந்த 2024-ம் ஆண்டுப் புற்றுநோய் உறுதியானது. வீடியோ மூலம் தான் நலமாக இருப்பதை அறிவித்துள்ள அவர், ஆரம்பகால நோயறிதலின் அவசியம் என்ன என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, சரியான நேரத்தில் நோயை கண்டறிந்ததால் தான், இன்று சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன் என்றும், என் சிகிச்சைகளும் வரும் நாட்களில் குறைந்துவிடும் எனவும் கூறியுள்ளார்.
















