ஹைதராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன் சேர்ந்து மெஸ்ஸி கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, 3 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்ற அவருக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கைகுலுக்கி வரவேற்பு அளித்தார்.
இதையடுத்து ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அணிக்கு எதிரான கண்காட்சிப் போட்டியில் மெஸ்ஸி பங்கேற்று கால்பந்து விளையாடினார்.
தொடர்ந்து மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கிக் கால்பந்தை உதைத்து உற்சாகப்படுத்தினார்.
இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற சிங்கரேணி RR அணிக்கு மெஸ்ஸி கோப்பையை வழங்கிப் பாராட்டினார்.
பின்னர் பேசிய கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, ஹைதராபாத் ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி எனக் கூறினார்.
















