100 ஸ்டார்லிங்க் அலகுகளை எலான் மஸ்க் இலங்கைக்கு வழங்கியுள்ளார்.
ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு செயற்கைக்கோள் இணையச் சேவையாகும்.
இந்த நிலையில், பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்காக 100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
வன்பொருள் அலகுகள் ஏற்கனவே நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்காக அவற்றை பேரிடர் மேலாண்மை மையத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
















