தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பாஜக சார்பில் எஸ்ஐஆர் குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல் திட்டங்களை வகுக்கும் பயிலரங்க மாநாடு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தலைவர் சித்தரங்கன் தலைமையில் நடைபெற்ற பயிலரங்கத்தை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் தொடங்கி வைத்தார்.
இதில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, நிகழ்ச்சியில் பேசிய மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு பூத் கமிட்டி உறுப்பினர்கள் எஸ்ஐஆர் படிவங்களில் போர்க்கால அடிப்படையில் திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், இது கட்சிக்கு ஆற்றும் மிக முக்கிய பணி எனவும் கூறினார்.
















