இந்தியா – மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சியான ஹரிமாவ் சக்தியின் 5-வது பதிப்பு ராஜஸ்தானில் நடைபெற்றது.
கூட்டு ராணுவ பயிற்சி ஹரிமாவ் சக்தி என்பது இந்தியாவிலும் மலேசியாவிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் ராணுவப்பயிற்சி நிகழ்வாகும்.
கடந்தாண்டு மலேசியாவின் பகாங் மாவட்டத்தில் உள்ள பென்டாங் முகாமில் இந்தக் கூட்டு பயிற்சி நடைபெற்றது. இந்நிலையில் இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியான ஹரிமாவ் சக்தி 2025, ராஜஸ்தானின் பிகானரில உள்ள மகாஜன் ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்சில் நடைபெற்று வருகிறது.
வரும் 18ம் தேதி வரை இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறுகிறது. இதில் இரு நாட்டு ராணுவங்களும் தீவிரமாகப் பங்கேற்கும் ஒத்திகை, தீவிரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளில் தாக்குதல் நடத்துதல், துறைமுகத்தை ஆக்கிரமித்தல், ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுதல், பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துதல், தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதிகளில் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.
இந்தக் கூட்டு பயிற்சி இரு நாட்டு ராணுவங்களுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, நல்லிணக்கம் மற்றும் தோழமையை மேம்படுத்த உதவுகிறது.
















