உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கேரளா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.
கேரளா மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் இடதுசாரி அரசு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
இதன் காரணமாகக் கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வன்முறைகள் வெடித்தன. குறிப்பாகக் கண்ணூர் மாவட்டத்தில் சிபிஎம் கட்சியினர் கத்தி, அரிவாள் போன்ற கொடூர ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தின…
மேலும், UDF வெற்றி ஊர்வலத்தின் மீது கற்களை வீசிவிட்டு தப்பிச்சென்ற சிபிஎம் கட்சியினர், காங்கிரஸ் அலுவலகத்தையும், நிர்வாகி ஒருவரின் வீட்டையும் சூறையாடினர்.
அதிலும், கோழிக்கோடு மாவட்டத்தின் எரமலாவில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த இந்திரா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு நிலைமை மேலும் மோசமடைந்தது.
இதுமட்டுமின்றி திருவனந்தபுரத்தில் வெற்றி பெற்ற பாஜகவினர் மீதும் தாக்குதல்கள் கட்டவிழ்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் ஒரு சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
















