பாஜக அவசியம் எனக் கேரள மக்கள் உணர ஆரம்பித்துவிட்டதையே, தேர்தல் வெற்றி பிரதிபலிப்பதாகப் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகக் கோவையில் அவர் அளித்த பேட்டியில்,
பாஜக அவசியம் எனக் கேரள மக்கள் உணர ஆரம்பித்துவிட்டதையே, தேர்தல் வெற்றி பிரதிபலிக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
ஊழலை ஆதரிக்கும் கட்சியாகத் திமுக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டியவர் சிறை சென்ற அமைச்சர்களை திமுக இன்னும் பதவியில் வைத்திருப்பதற்கான காரணம் என்ன? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
செந்தில் பாலாஜி மீது போடப்பட்ட வழக்குகள் பொய்யானவை என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் திமுகவை புகழ வேண்டும் என்பதற்காகவே மகளிர் உரிமைத்தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.
















