தேர்தலை மையப்படுத்தியே அரசியல் செய்யாமல், மக்களுடன் மக்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என்கிற பிரதமரின் அறிவுரைக்கு இணங்கப் பாஜக இயங்குவதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், மருளைபாளையத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை கே.பி.ராமலிங்கம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கான வழிவகைகளைப் பாஜகவினர் செய்து தர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இதுபோன்ற மருத்துவச் சேவைகளுக்கு உறுதுணையாக இருக்கும் மருத்துவர்களுக்குக் கே.பி.ராமலிங்கம் நன்றி தெரிவித்தார்.
















