நடிகை பாலியல் வழக்கில் நீதி முழுமையடையவில்லை என நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
நடிகை பாலியல் வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டது குறித்து நடிகை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நீதிமன்றத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றும், ஆனால் இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
குற்றம் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளதகாவும், இந்தக் கொடூரமான செயலைத் திட்டமிட்டு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ள அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், அப்போது தான் உண்மையான நீதி நிலைநாட்டப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தான் உட்பட சமூகத்தின் காவல்துறை மற்றும் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றும் பணியிடத்திலும், தெருக்களிலும், வாழ்க்கையிலும் பயமின்றி தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சூழ்நிலை பெண்களுக்கு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
















