திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அருகே சிறுமியின் பெற்றோரை ஒருமையில் பேசிய குழந்தைகள் நல மையம் ஊழியர்களை மக்கள் முற்றுகையிட்டனர்.
பந்தாரப்பள்ளி குல்லன் வட்டம் பகுதியில் 16 வயது சிறுமிக்குத் திருமணம் நடைபெறுவதாகக் குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. ‘
அதன்பேரில் விசாரிக்க வந்த குழந்தைகள் நல மைய ஊழியர்கள், சிறுமி மற்றும் அவரது பெற்றோரை ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பொய்யான தகவலைக் கேட்டு விசாரிப்பதாகக் கூறி குழந்தைகள் நல மைய ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி குழந்தைகள் நல மைய ஊழியர்களை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
















