துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் இந்தத் தாக்குதல் ஆஸ்திரேலிய யூதர்கள் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் எனத் தெரிவித்தார்.
யூத விரோத பயங்கரவாதம் ஆஸ்திரேலியாவின் இதயத்தைத் தாக்கியுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டேன் என்றும் அவர் கூறினார்.
















