ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய நீரை ஒரு வாரத்திற்குள் அகற்றவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகச் சட்டமன்ற உறுப்பினர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருமால்பூர் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் நீரால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நீரை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















