திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை, திமுக-வினர் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், மலைப்பாம்பாடி பகுதியில் வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது அவரது பேச்சைக் கேட்காமல் திமுக தொண்டர்கள் கூட்டத்தை விட்டுக் கலைந்து சென்றனர்.
சிலர் முகப்பு பகுதியில் அலங்காரத்திற்காகக் கட்டப்பட்டிருந்த வாழை தார்களை முண்டியடித்து வெட்டிச் சென்றனர்.
அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் திமுக-வினர் தாக்க முயன்றதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது.
















